இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி என்று அடுத்தடுத்து இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்த இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில உறைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும், சுமார் 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக பலு டோங்கலா என்ற இடத்தில் சுனாமி தாக்கியது.

இந்த இயற்கை பேரழிவுகளில் சிக்கி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டிடங்கள் இடிந்தும், வாகனங்கள் சுனாமியில் அடித்துச் சென்றன. இதனால், பல கோடி மதிப்பில் சேதமடைந்துள்ளன.

இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவுக்கு உதவுமாறு சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள தகவல் மீண்டும் பீதியை கிளப்பி உள்ளது. ஆனால், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>