மகாத்மாவின் 150வது பிறந்தநாள் ! நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவிற்கு அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இதனால், டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இவரை தொடர்ந்து, குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்கேமாகன் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இவர்களைத் தவிர, பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.