நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்-அமலாக்கத்துறை அதிரடி

13 ஆயிரம் கோடி ரூபாய் பஞ்சாப் வங்கிக் கடன் மோசடி வழக்கில், நீரவ் மோடி தேடப்பட்டு வருகிறார்.  மேலும் வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடியின் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. 

வைர வணிகர் நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

நியூயார்க்கில் சுமார் 216 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. லண்டனில் 56.97 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து ஒன்றும் முடக்கப்பட்டுள்ளது.

இதேபோல, 278 கோடி ரூபாய் இருப்புடன், 5 வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 44 கோடி ரூபாய் இருப்புடன் ஒரு வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து, நீரவ் மோடிக்கு சொந்தமான 22 கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளன. தெற்கு மும்பையில் 19 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது.

More News >>