ஆப்கன் காபுல் நகரில் குண்டு வெடித்து 45 பேர் பலி
காபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல் என்ற இடத்தில் இரு வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 45க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில், ஆப்கன் வாய்ஸ் என்ற இடம் உள்ளது. இங்கு, காலை 10.30 மணியளவில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு உள்துறை செய்தி தொடர்பாளர் கூறினார். இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இதைதொடர்ந்து, சில மணி நேரத்தில் மீண்டும் புலே சோக்ஹிடியா பகுதியில் உள்ள தெப்யானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள கலாச்சார மையத்தை குறிவைத்து தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பான செய்தியை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும், உயிர் பலியின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.