விவசாயிகளின் பேரணியால் டெல்லியில் வன்முறை வெடிக்கும் அபாயம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேச விவசாயிகள் டெல்லியை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர்.
இன்று இந்த பேரணி உத்தர பிரதேசம் - டெல்லியின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்களின் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்ற சில கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி மேற்கொண்டனர்.
இந்த பேரணி உத்தரப்பிரதேசம் ஹரித்வாரில் உள்ள திக்கிட் காட் பகுதியில் தொடங்கியது. டெல்லி நோக்கி வந்த பேரணியில் வரும் வழியில் பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வந்ததால் மாபெரும் பேரணியாக மாறியது.
இந்த பேரணி உத்தரபிரதேசம் டெல்லியின் எல்லையான காசியாபாத்தை அடைந்தது. பேரணியை டெல்லியில் நுழையவிடாமல் தடுக்க போலீஸார், பேரணி வரும் டெல்லியின் நெடுஞ்சாலியில் தடுப்புகளை வைத்து தடுக்க முற்பட்டனர்.
அதை மீறி விவசாயிகள் வர முயல அந்த இடம் போர்களம் போல் காணப்பட்டது. விவசாயிகளை விரட்ட போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலைக்க முயன்றனர்.