புதிய மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்த 2.0 படக்குழு !
இன்று காலை 11 மணிக்கு 2.0 படத்தின் மேக்கிங் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தில் உலகம் முழுவதும் 3000 கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்ற மேக்கிங் வீடியோவின் 4வது பாகம் வெளியிடப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் 2.0 படம் உருவாகி வருவது நாம் அறிந்த ஒன்றே. படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக மட்டும் உலக அளவில் 25 பெரிய நிறுவனங்கள் உழைத்துள்ளது என்பது புதிய அப்டேட். மேலும், 2.0 படத்தில் 2,150 விஎஃப்எக்ஸ் ஷாட்ஸ்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் மேக்கிங் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்ரீனிவாஸ் மோகன் தலைமையில் தான் உலகளவில் பல ஹாலிவுட் படங்களுக்கு ஒர்க் பண்ண கிராபிக்ஸ் நிறுவனங்கள் இயங்கின. மேலும், படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக டிசில்வா உள்பட 4 ஆக்ஷன் ஸ்டண்ட் மாஸ்டர்களை ஷங்கர் இந்த படத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.
மேலும், ஃபுட்பால் கிரவுண்டில் சிட்டியுடன் மோது மொபைல் ரோபோட்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது குறித்த ப்ரீ – விசுவல் வீடியோவையும் காண்பித்துள்ளனர். ரஜினி, எமிஜாக்சன் நடனம் ஆடும் ‘எந்திரலோகத்து சுந்தரியே’ பாடலின் மேக்கிங்கையும், பிரம்மாண்டமாக அப்பாடலுக்கு அமைக்கப்பட்டுள்ள செட்டையும் காண்பித்துள்ளனர்.
வெளியிடப்பட்ட 3 மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் பேர் இந்த மேக்கிங் வீடியோவை பார்த்துள்ளனர். ஒரு நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
எல்லாம் சரி, படத்தை எப்ப சார் போடுவீங்க, அல்ல ஃபைனல் ரிலீஸ் தேதியையாவது சொல்லுங்கள் என்பதே ரசிகர்களின் கோரிக்கை!