கங்கனாவின் மணிகர்னிகா டீஸர் ரிலீஸ் !
ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள ‘மணிகர்னிகா’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. போர்க்காட்சிகளில் கங்கனாவின் ஆக்ரோஷம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பாலிவுட்டில், சமீபகாலமாக, பயோபிக் படங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. தோனியின் பயோபிக் வெற்றியடைந்ததை தொடர்ந்து, வரிசையாக பயோபிக் படங்கள் வாரத்திற்கு ஒரு முறை வருவது போல் மாறிவிட்டது. இந்நிலையில், கங்கனா ரனாவத்தும் ஒரு பயோபிக் பண்ணுகிறார் என்ற நிலையில், ஆரம்பிக்கப்பட்ட ‘மணிகர்னிகா’ தனது பிரத்யேக கதையால், பாலிவுட்டையே வியக்கவைத்துள்ளது.
இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளைக் காரர்களுடன் வட நாட்டில் போரிட்டு அவர்களை ஓட ஓட விரட்டியவர் ராணி லக்ஷ்மிபாய். அவரது வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது மணிகர்னிகா.
கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜனவரி 25ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தற்போது, படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. அமிதாப் பச்சனின் சிம்மக் குரலில் படத்தின் டீஸர் தொடங்குகிறது. ராணி லக்ஷ்மிபாயாக உடல் மொழி, ஆடை, தோற்றம் என கங்கனா லக்ஷ்மிபாயாகவே மாறியுள்ளார். அதுவும், ஆங்கிலேயர்களிடையே அவர் நடத்தும் போர்க் காட்சிகள் பிரம்மிப்பின் உச்சம்.
இப்படத்திற்கு பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளது. இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பாகுபலியை தொடர்ந்து, விஜய்யின் மெர்சலுக்கு இவர் கதை எழுதியது குறிப்பிடத்தக்கது.