56 நாட்கள் சிறைவாசம்.. திருமுருகன் காந்தி இன்று விடுதலை

56 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு இன்று ஜாமினில் வெளிவந்தார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடந்து அதில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஐ.நா சபையில் பேசினார் திருமுருகன் காந்தி. கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அதிகாலை பெங்களூரு வந்த திருமுருகன் காந்தியை காவல்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதியப்பட்டது. முதலில் நீதிமன்ற காவலில் திருமுருகன் காந்தியை வைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் வேறுவொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில் அவருக்கு உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் செங்கல்பட்டு, மற்றும் எழும்பூர் நீதிமன்றங்களில் ஜாமீன் வழங்கி ஆணை பிறப்பித்தன. அந்த ஆணை வேலூர் சிறை அதிகாரிகளுக்கு சென்றடைந்ததும் தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டதும் அவரது இயக்கத்தினர் உற்சாகமடைந்துள்ளனர்.

More News >>