ரஜினியை மக்கள் முற்றிலும் புறக்கனிக்க வேண்டும் - தமிழ் தேசிய பேரியக்க தலைவர்
ரஜினி அரசியலுக்கு வருவதை சினிமா போல் வரவேற்காமல் மக்கள் முற்றிலும் புறக்கனிக்க வேண்டும் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணியரசன், “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு என (பூட்டான், நேபாளம், மியான்மர்) தமிழக அரசு செய்தி குறிப்பில் வெளியிட்டதை ரத்து செய்யவேண்டும்.
ஆர்.கே.நகர் தேர்தல் மூலம் தொகுதிக்கு 20 கோடி இல்லாமல் வேட்பாளர் நிற்க முடியாது என்ற அரசியல் சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை சினிமா போல் வரவேற்காமல் மக்கள் முற்றிலும் புறக்கனிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.