இந்தோனேசியாவில் இயற்கை சீற்றத்தில் சிக்கி இதுவரை 1234 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசரி என்ற தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் கடந்த 27ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ரிக்டர் அளவு 6.1 ஆக இருந்தது.

இதையடுத்து, பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் பல இடிந்து விழுந்து கடும் சேதத்தை சந்தித்தன. இதன் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அது திரும்பப்பெறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் சுனாமி தாக்கியது.

இந்த திடீர் சுனாமி சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் ஊருக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதில், பலர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இன்று பிற்பகல் 1 மணி நேர நிலவரப்படி நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை, பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

More News >>