இந்தோனேசியாவின் சூழலை பயன்படுத்தி 1200 கைதிகள் தப்பியோட்டம்
நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை பயன்படுத்தி இந்தோனேசியாவில் சிறையில் இருந்து சுமார் 1200 கைதிகள் தப்பியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சுனாமி பேரலைகள் தாக்கியது. இதனால், பல கட்டிடங்கள் சரிந்தது. இயற்கையின் கோர தாண்டவத்தில் சிக்கி இதுவரை 1200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், பலரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மக்கள் பலர் வீடுகலை இழந்து, உண்ண உணவுக்கூட இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், இந்தோனேசியாவில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி அங்குள்ள மூன்று சிறைகளில் இருந்து சுமார் 1200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இதனால், சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து இந்தோனேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறையில் இருந்து தப்பித்தோடிய அனைவரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.