சென்னை வந்தது சி.எஸ்.பி 8001 வியட்நாம் கப்பல்..
இந்திய கடலோர காவல்படையுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக வியட்நாம் கடலோர காவல்படைக்கு சொந்தமான சிஎஸ்பி 8001 என்ற கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
இந்திய கடலோர காவல் படையுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக வியட்நாம் கடலோர காவல்படைக்கு சொந்தமான சி.எஸ்.பி.8001 என்ற கப்பல் சென்னை துறைமுகத்திற்கு நேற்று காலை வந்தது.
இந்த கப்பலை வரவேற்கும் விதமாக, பேண்டு வாத்தியங்கள் வாசிக்கப்பட்டு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், துறைமுக அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். வியட்நாமில் இருந்து சுமார் 3,575 நாட்டிக்கல் மைல் தூரம் இந்த கப்பல் கடந்து வந்தது.
இந்நிலையில், இந்திய கடற்பரப்பில் நாளை வியட்நாம் கப்பலுடன், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 3 கப்பல்கள், ஹெலிகாப்டர், டோர்னியர் விமானம் ஆகியவை சாகச நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளன. இதனுடன் தேசிய கடல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் கப்பலும் பங்கேற்கிறது. இந்தியாவும், வியட்நாமும் ஏற்கனவே செய்துகொண்ட நட்புறவு உடன்பாடு அடிப்படையில் இந்த கூட்டுப்பயிற்சி மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டுப்பயிற்சியில், கடல் கொள்ளை தடுப்பு, எல்லை தாண்டி மீன் பிடித்தல் தடுப்புக்காநன ஒத்திகை ஆகியவை நடைபெறுகின்றன.