நாளை 100% காதல் சிங்கிள் ரிலீஸ்!
ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள ’100% காதல்’ படத்தின் சிங்கிள் டிராக் நாளை (அக்டோபர் 4) வெளியாகிறது என்ற தகவலை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எம்.எம். சந்திரமெளலி இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் நடிகை ஷாலினி பாண்டே நடிப்பில் காதல் படமாக உருவாகியுள்ள 100% காதல் படத்தின் சிங்கிள் லவ் சாங் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.
”ஒரு வானம்” என்ற வரிகளில் தொடங்கவுள்ள இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ், ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியுள்ளார். மேலும், முதன்முறையாக எலக்ட்ரோ பாப் முறையை இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளதாகவும் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாளை காலை 9 மணிக்கு சூரியன் எப்.எம்.மில் இந்த பாடல் ரிலீஸ் செய்யப்படுகிறது.
அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஷாலினி பாண்டே நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். தற்போது, ஜி.வி. பிரகாஷுடன் நாயகியாக ஜோடி சேர்ந்துள்ள ஷாலினி பாண்டே, தமிழக ரசிகர்களை பெரிதும் கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.