கொல்கத்தா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: மருந்துகள் எரிந்து நாசம்
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தாவில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியிடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவு, அங்கிருந்த மருந்து உள்பட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் சிகிச்சைப் பிரிவுகள் இல்லை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன்.
தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.