ராகுல் கரீனா கபூர் காதல்- நெருக்கமான ஒருவர் தகவல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாலிவுட் நடிகை கரீனா கபூர் விரும்பியதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கரீனா கபூர். இவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கரீனா கபூர் சயீல் அலிகானை காதலிப்பதற்கு முன்னதாக வேறொருவரை காதலித்ததாகவும் அவருடன் டேட்டிங் செய்ய விருப்பம் இருந்ததாகவும் கரீனா குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.
அது வேறு யாருமில்லை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தானாம். இது குறித்து அவர் கூறுகையில் சயீப் அலிகானை காதலிப்பதற்கு முன்பு ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பியுள்ளார் என்று சோனியா காந்தி மற்றும் கரீனா குடும்பத்திற்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இரு குடும்பங்களைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு இரு குடும்பங்களுடனும் இணக்கமாக நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது ராகுல் காந்தி மீது தனது காதலை வெளிப்படுத்திய கரீனா அவருடன் இணைந்து பல இடங்களுக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.