இந்தோனேசியா மக்களுக்கு எச்சரிக்கை.. எரிமலை வெடித்து சிதறியது

நிலநடுக்கம், சுனாமி என இந்தோனேசியா மக்களை வாட்டி வதைத்த இயற்கை சீற்றங்களை தொடர்ந்து தற்போது, எரிமலை வெடிக்கத் தொடங்கியது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த 29ம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பலு என்ற நகரில் சுனாமி தாக்கியது. இதில், கடல் நீர் ஊருக்குள் புகுந்து கடும் சேதத்தை விளைவித்தது. இந்த இயற்கை சீற்றங்களால், வீடுகள், கட்டிடங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தன. இதனால், மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

மேலும், நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வேதனையில் இருந்தே இன்னும் இந்தோனேசியா மக்கள் மீளாத நிலையில், மீண்டும் ஓர் இயற்கை சீற்றம் தாக்க தயாராகி வருகிறது. ஆம். சுலவேசி தீவில் உள்ள ஒரு எரிமலை இன்று காலை வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்யது. எந்த நேரத்திலும், நெருப்புக் குழம்பு வெளிப்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் புகை வானில் சுமார் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளது.

இந்த சாம்பல் விமான இன்ஜின்களை பாதிப்படைய வைக்கும் என்பதால், அப்பகுதியில் விமானங்களை இயக்க தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More News >>