8 வயதில் திருமணம் 20 வயதில் டாக்டருக்கு படிப்பு!

ராஜஸ்தானில் 8 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சிறுமி டாக்டருக்கு படிக்க உள்ளார்.

ஜெய்பூர் அருகேயுள்ள கோமு என்ற பகுதியைச் சேர்ந்த ருக்மாவின் சகோதரி ரூபா,. வீட்டில் ஐந்து பேர். ருக்மாவுக்கும் பாபு லால் என்பவருக்கும் திருமணம் நடந்த போது 8 வயது ரூபாவை அவரது சகோதரர் சங்கர்லாலுக்கு திருமணம் செய்து வைத்தனர். ரூபாவுக்கோ படிப்பில் மிகுந்த ஆர்வம். கணவரும் மைத்துனரும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். 10ம் வகுப்பில், 84 சதவிகி மதிப்பெண் பெற்றார். 12ம் வகுப்பில் 81 சதவிகித மதிப்பெண் எடுத்து அசத்தினார்.

கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று, நீட் தேர்வில் 503வது ரேங்கில் வெற்றி பெற்றுள்ளார். அரசு மருத்துவக் கல்லூரியில், இடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தற்போது காத்துக் கொண்டிருக்கிறார். கோட்டாவில் உள்ள ஆலன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ரூபாவுக்கு மருத்துவம் படிக்க அந்த மையமே உதவி செய்ய முன்வந்துள்ளது.

More News >>