பெரியபாண்டியன் மனைவியிடம் கண்ணீருடன் மன்னிப்புக் கேட்ட முனிசேகர்!

நெல்லை அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்திற்கு சென்ற முனிசேகர் பெரியபாண்டியனின் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார்.

சென்னை, கொளத்தூர் தங்க நகைக்கடையின் கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சமீபத்தில் சுட்டுக் கொள்ளப்பட்டார். பெரிய பாண்டியனுடன் சென்ற முனிசேகர் காயத்துடன் உயிர் தப்பினார்.

ஆனால், காவல் ஆய்வாளர் முனிராஜ் தான் பெரிய பாண்டினை தவறுதலாக சுட்டதாக ராஜஸ்தான் காவல் தெரிவித்தது. இதுதொடர்பாக, ராஜஸ்தான் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

பெரியபாண்டியன் மறைவு குறித்து முனிசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதில், தனது துப்பாக்கியில் பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டதாக முனிசேகர் கூறினார்.

இது தொடர்பாக முனிசேகரிடம் தமிழக காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் பெரியபாண்டியனை சுட்டது முனிசேகரின் கையில் இருந்த துப்பாக்கியால் தான் என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பெரியபாண்டியனின் சொந்த ஊரான நெல்லை அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்திற்கு சென்ற முனிசேகர் பெரியபாண்டியனின் மனைவியிடம் கண்ணீருடன் நடந்ததை விளக்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

More News >>