இதை மனதில் வைத்துதான் அரசியலில் இருக்கிறேன் என ரஜினி கூறுகிறார் - வைகோ
ஆண்டவனே காப்பாற்ற முடியாது என்று கூறியதை மனதில் வைத்து கொண்டுதான் 1996-ல் இருந்தே அரசயலில் இருக்கிறேன் என ரஜினி கூறியிருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு ஆறு நாள்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், வருகின்ற 31ஆம் தேதி அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறிய வைகோ, “1996-ல் ரஜினி இப்போதைய ஆட்சி தொடர்ந்தால், ஆண்டவனே காப்பாற்ற முடியாது என கருத்து தெரிவித்திருந்தார்.
இது முழுமையாக திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்திற்கு பெரிதும் பயன்பட்டது. அதனை மனதில் வைத்து கொண்டுதான் 1996-ல் இருந்தே அரசயலில் இருக்கிறேன் என ரஜினி கூறியிருக்கிறார். 31-ஆம் தேதி ரஜினி என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.