இன்றைய (04.10.2018) ராசி பலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.
மேஷம்: மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் வசதியான வாழ்க்கை அமையும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். பெண்கள் வழியில் சில ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் பெயர் சொல்லும்படியான விஷயம் ஒன்று நடக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். காரிய தடைகள் விலகும். உத்யோகத்தில் எதிரிகளின் தொல்லை குறையும்.
மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, தேவைக்கு அதிகமாக பணம் வரும். தெய்வ பலம் கூடும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்யோகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
கடகம்: கடக ராசி நேயர்களே, புது வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி உண்டு. எப்போதும் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும்.
சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நினைவுக்கு வரும். உடல் நலம் சீராகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு சீராகும். உத்யோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும்.
கன்னி: கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீண் செலவுகளை தவிர்க்கவும். உத்யோகம் தொடர்பாக வெளிநாடு சென்று வர முடியும்.
துலாம்: துலாம் ராசி நேயர்களே, எதிர்பாராத பயணங்களால் திருப்பம் உண்டாகும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் செல்லும் போது அலைபேசியை உபயோகிக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் செயல்கள் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேருவர். தொழில், வியாபாரம் விருத்தி பெரும்.
தனுசு: தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சுக வாழ்வு ஏற்படும். பெற்றோர்கள் விரும்பி கேட்டதை வாங்கி தர முடியும். பழைய நண்பர்கள் வகையில் சில பிரச்சனைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது வாய்ப்புகள் வரும்.
மகரம்:மகர ராசி நேயர்களே, யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பகைவர்கள் பணிந்து போவார்கள். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்பம் வரும்.
கும்பம்: கும்ப ராசி நேயர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் ஆதரவு பெருகும். கணவன், மனைவிக்கிடையே நேசமும், நெருக்கமும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் போட முடியும்.
மீனம்:மீன ராசி நேயர்களே, உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். எடுத்துக் காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபகரமான தொழில் ஒன்று அமையும்.