சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை..
சென்னை மற்றும் சுற்றுப்புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடைக்காலத்து வெயில் போல் வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவ்வப்போது, மாலை நேரத்தில் மட்டும் லேசான மழை பெய்து வந்தது.
இந்நிலையில், சென்னை வாசிகளை குஷிப்படுத்தும் விதமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், திருவல்லவிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை, போரூர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.