குண்டாக இருப்பதும் அதிர்ஷ்டம் தான்!

உடல் எடை அதிகரித்து இருப்பதால், பல பட வாய்ப்புகள், நித்யா மேனனுக்கு கிடைக்காமல் போவதாகவும், உடல் எடையை குறைத்தால், பட வாய்ப்புகள் வீடு தேடி வரும் என்றும் பல பேர் எனக்கு அறிவுரை வழங்கினார்.

ஆனால், நான் சற்று குண்டாக இருப்பதால் தான் தமிழகத்தின் இரும்பு பெண்மணி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என புன்னகையுடன் கூறியுள்ளார் நடிகை நித்யா மேனன்.

கேரள நடிகையான நித்யா மேனன், தமிழில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானார். சித்தார்த்துடன் 180, லாரன்சுடன் காஞ்சனா, மணிரத்னத்தின் ஓ.கே. கண்மணி போன்ற படங்களில் பெரிதும் கவனிக்கப்பட்டார். விஜய்யுடன் மெர்சலில் நித்யா மேனன், நடித்த ரோல், தான் இன்று வரை தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெருமளவில் அவருக்கு ஈட்டி தந்துள்ளது.

இந்நிலையில், தற்போது, மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை பயோபிக் படமாக எடுக்க உள்ளார். இதில், நித்யா மேனன் தான் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ’தி அயன் லேடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் வாய்ப்பு தான் சற்று குண்டாக இருப்பதாலேயே கிடைத்த அதிர்ஷ்டம் என தனக்கு அட்வைஸ் கொடுத்த சில இயக்குநர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூறியுள்ளார் நித்யா மேனன்.

ஆனபோதும், குண்டாக இருப்பதிலும் ஒரு லிமிட் இருக்கு, என் எல்லை எனக்கு தெரியும், இப்படி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அந்த எல்லை நான் தாண்டமாட்டேன் என்றுள்ளார். விரைவில், இவரது அசத்தலான நடிப்பில், தமிழக மக்கள் மீண்டும் ஜெயலலிதாவை பார்க்க போகின்றனர்.

More News >>