டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் கிருலோஷ்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸூம், 11.67 சதவீதம் கருணை தொகையும் சேர்த்து 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

இதில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அறிவித்துள்ள அரசாணைப்படி போனஸ் பெற தகுதி உச்சவரம்பு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அதனடிப்படையில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களில் ரூ.21 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பணியாளர்கள் போனஸ் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய கூடிய மேற்பார்வையாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 400-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 300-ம், உதவியாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800-ம் வழங்க வேண்டும்.

இந்த போனஸ் பட்டுவாடா சட்டம் 1956-ன்படி போனஸ் உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் என்ற அடிப்படை கொண்டு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

More News >>