உயிாிழந்த 5 ரூபாய் டாக்டா் - சென்னையில் மக்கள் உருக்கம்
மருத்துவம் வியாபாரமாக மாறிய இந்த காலத்திலும் மக்களுக்கு 5,10,20 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை வழங்கி வந்தாா் டாக்டர். ஜெகன்மோகன். அவர் நேற்று மாலை உடல் நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வந்த 20 ரூபாய் டாக்டா் ஜெகன்மோகன் உடல்நலக் குறைவு காரணமாக புதன் கிழமை காலை 11 மணியளவில் உயிாிழந்தாா்.
சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூாியில் மருத்துவம் முடித்த ஜெகன்மோகன் தொடா்ந்து தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளின் நலன் காக்கும் வகையில் வாழ்ந்து வந்தாா். கடந்த 1979ம் ஆண்டு முதல் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும் ஏழைகளுக்கு மருத்துவம் பாா்க்கத் தொடங்கினாா்.
தனது 72வது வயதிலும் மக்களுக்கு 20 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை வழங்கி வந்தாா். இந்நிலையில் திடீா் உடல்நலக் குறைவு காரணமாக புதன் கிழமை காலை 11 மணியளவில் உயிாிழந்தாா்.
தினமும் காலை 75 போ் மாலை 75 போ் என சராசரியாக நாள் ஒன்றுக்கு 150 போ் வரையில் சிகிச்சை வழங்கி வந்தாா் ஜெகன்மோகன்.
பொதுமக்கள் அவரை பற்றி கூறியது எங்க ஏரியா 5 ரூபாய் டாக்டர் சிலர் 10 ரூபாய் சிலர் 20 ரூபாயும் கொடுப்பார்கள் வசதியே இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்ப்பார். மக்கள் மருத்துவர், கை ராசிக் காரர் அவரிடம் நமது வருத்தத்தை கூறினால் அதற்கு மருந்துடன் மனோ தைரியத்தையும் அளிப்பவர், நல்லா காமடியா பேசுவார், நல்ல மருத்துவராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதரும் கூட அவருக்கு பார்வை குறைவற்ற நிலையிலும் மக்கள் பணியாற்றிவரை கடவுளாக வணங்குகிறேன் என்றார்கள்.
மறைந்த மக்கள் மருத்துவருக்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும், மரியாதை செலுத்திடவும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்
படத்தில் நடிப்பவர்கள் ஹீரோக்கள் இல்லை இது போல் வாழ்ந்து காட்டுபவர்கள் தான் உண்மையான ஹீரோ அவர் இறந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.