திருமுருகன் காந்தியை சந்தித்த மு.க.ஸ்டாலின்.
மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தியை தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்
ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து உரையாற்றிய மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா். ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியது
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது உள்ளிட்ட வழக்குகளில் திருமுருகன் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் 53 நாட்கள் சிறைவாசத்தை தொடா்ந்து திருமுருகன் காந்திக்கு கடந்த 1ம் தேதி எழும்பூா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஏற்கனவே சிறைச்சாலையில் 2 முறை மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி சிறையில் இருந்து வந்தவுடன் உடல்நலக் கோலாறு காரணமாக செனனையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவர் வயிற்று போக்கு மற்றும் செரிமான பிரச்சினை, ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தியை தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.