கடன் வழங்கியதில் முறைகேடு: ஐசிஐசிஐ வங்கி சி.இ.ஓ சந்தா கோச்சார் ராஜினாமா
வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியில் தலைமை செயல் அதிகாரியாக சாந்தா கோச்சார் இருந்தபோது, கடந்த 2012ம் ஆண்டில் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால், சந்தா கோச்சார் மற்றும் அவரது குடும்பத்திற்கு பெரும் பங்கு கிடைத்திருப்பதாகவும், மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கவுன்சில் குற்றம்சாட்டியது.
அதாவது, கடன் தொகையில் ரூ.2,800 கோடி ரூபாய் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதால் முறைகேடு புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, சந்தா கோச்சார் மீது விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு, சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவியை சந்தா கோச்சார் இன்று ராஜினாமா செய்தார். இதனை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் புதிய சிஇஓவாக நியமித்து அறிவித்துள்ளது.