ரஜினிக்கு மச்சானாக போகும் சசிகுமார்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் ரஜினி, விஜய்சேதுபதி மோதும் சண்டைக்காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன.

அதனையடுத்து சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டது. தற்போது ரஜினி மற்றும் திரிஷா இணையும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்

இந்நிலையில் ரஜினியுடன் ஒரு முக்கிய கேரக்டரில் சசிகுமார் நடிக்க இணைந்துள்ளார். அவர் ரஜினிக்கு நண்பராகவும் திரிஷாவுக்கு அண்ணனாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 பல பிரபலங்களும் நடிக்கும் பேட்ட படத்தில் சசிக்குமார் நடிப்பது ரசிகர்களின் ஏதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது குறிப்பிடதக்கது.

More News >>