உதயசூரியன் பேக்ரவுண்டில் ரஜினியின் பேட்ட செகண்ட் லுக் ரிலீஸ்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியானது.
இதில், கெடா மீசையுடன் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில், நெற்றியில் திருநீருடன் யங் லுக்கில் ரஜினி காட்சியளிக்கிறார். பின்னாடி இருக்கும் உதய சூரியன் தான் டவுட்டை கிளப்புகிறது.
சர்கார் படத்தை தொடர்ந்து கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினியின் பேட்ட படம் தயாராகி வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், மல்டி ஸ்டார் படமாக பேட்ட படம் உருவாகி வருகிறது.
ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என நட்சத்திர பட்டாளங்களுடன் பேட்ட படம் உருவாகி வருகிறது.
அருணாச்சலம் படத்திற்கு பிறகு, ரஜினி வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில், திருநீர் பட்டையுடன் தோன்றியுள்ளது ரசிகர்களிடம் விண்டேஜ் ரஜினி இஸ் பேக் என சொல்ல வைத்துள்ளது.
இதற்கு முன், பா. ரஞ்சித்தின் கபாலி மற்றும் காலா படத்தில் கருப்பு நிற உடைகளில் வலம் வந்த ரஜினி, ஆன்மீக ரீதியாக பேட்ட படத்தில் நடிக்க உள்ளது ஆன்மீக அரசியலுக்கான முன்னோட்டமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்பதால், போஸ்டரில், உதய சூரியன் சூசகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.