ஜோத்பூர் அரண்மனையில் திருமணமா? பிரியங்கா சோப்ரா யோசனை!

சர்வதேச நடிகையாக வலம் வரும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனசுக்கும் ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, கோலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைக்காததால், பாலிவுட் பக்கம் தாவினார். பின்னர், பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனது தனித்துவமான நடிப்பால் முன்னணி நடிகையாக முன்னேறினார்.

தற்போது அமெரிக்க வெப் தொடரான குவாண்டிகோவில் நடித்து சர்வதேச நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். டுவைன் ஜான்சனுடன் பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக அறிமுகமாகிய பிரியங்கா அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹாலிவுட்டில் புகழ் வெளிச்சம் அடைந்த பிரியங்காவுக்கு அமெரிக்காவை சேர்ந்த பாடகரான நிக் ஜோனசுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக சுற்ற தொடங்கினார்கள்.

நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர். இந்த ஆண்டு மத்தியில் தங்கள் காதலை ஒப்புக்கொண்ட இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று செய்தி வந்தது.

நிக் ஜோனஸ் காதலி பிரியங்கா சோப்ராவை பார்க்க அடிக்கடி இந்தியா வருவார். கடந்த வாரம் வந்தவர் பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையை சுற்றி பார்த்தார்.

தங்களது திருமணம் நடத்துவதற்காக அவர்கள் அரண்மனையை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

இந்த அரண்மனையை தவிர இன்னும் சில இடங்களையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இடம் இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் ஜோத்பூரில் தான் திருமணம் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் இந்திய பாரம்பரிய முறைப்படி தான் தனது நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

பிரியங்காவின் எண்ணத்திற்கு நிக் ஜோனசும் மதிப்பு கொடுத்து குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்தார். பிரியங்கா, நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம் இந்திய முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் இந்தி பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

ஆனால் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம் இரு நாட்டு முறைப்படியும் நடக்கும் என்கிறார்கள்.

அதற்கேற்றாற்போல் இருவரும் இந்தியா, அமெரிக்கா நாடுகளின் பாரம்பரிய திருமண உடைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்களாம்.

More News >>