கடவுளின் துகள் கண்டுபிடித்த பிரபல விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார்

நோபல் பரிசு பெற்ற பிரபல இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் (96). முவான் நியுட்ரினோ, கடவுளின் துகள் என பல்வேறு படைப்புகளை கண்டுபிடித்தவர். கடந்த 1988ம் ஆண்டு முவான் நியுட்ரினோ கண்டுபிடிப்புக்காக, வேறு 2 விஞ்ஞாணிகளுடன் இணைந்து லிலோன் நோபல் பரிசு பெற்றார். லியோன் லெடர்மேனுக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், லியோன் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

More News >>