தூத்துக்குடி தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- பெரும் சேதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
சந்திரகுமாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் நேற்றிரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீ பற்றி மளமளவென இயந்திரத்தில் பிடித்து எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறை ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்