ரசிகர்களை ஏமாற்றிய விஸ்வாசம் படக்குழுவினர்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் குறித்த புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழுவினரால், அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய்யின் சர்கார் பாடல் வெளியீட்டு விழா, ரஜினியின் பேட்ட செகண்ட் லுக் என தொடர்ந்து ரிலீசாகி வருவதால், அஜித் ரசிகர்களும், இந்த அறிவிப்பை கேட்டு, ஆனந்தமடைந்தனர். ஆனால், அஜித் ரசிகர்களை படக்குழு ஏமாற்றிவிட்டது.
விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் அல்லது டீஸர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ், தமிழ்நாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமையை கேஜேஆர் ஸ்டூடியோசின் கோட்டபாடி ஜே ராஜேஷ் வாங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம் என தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை வழக்கம் போல், டுவிட்டரில் ஓட்டி வருகின்றனர். நேற்று அஜித் ரசிகர் ஒருவர் கூறிய பஞ்ச் டயலாக்கை தான் விஜய் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதாக, அஜித் ரசிகர்கள் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது.