பில் கட்ட முடியாததால் தற்கொலை நாடகம் நடத்திய காதலர்கள்!
சேலத்தில் ஓட்டலில் தங்கிவிட்டு பில் கட்ட முடியாததால் ஃபேஸ்புக் காதலர்கள் தற்கொலை நாடகம்.
டெல்லியைச் சேர்ந்த டாக்டர் தம்பதியினரின் மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சீனாவில் டாக்டர் படிப்பு படித்து விட்டு சேலத்தில் பயிற்சி டாக்டராக உள்ளார். இந்நிலையில இவருக்கும் 22 வயது வாலிபர் ஒருவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் இருவரும் சேலத்தில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் வாடகைக்கு தங்கினர். பைக்கில் ஊர் ஊராக சுற்றியுள்ளனர் இதனால் செலவுகள் அதிகமாகி போக பைக்கை அடமானம் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.மேலும் மூன்று நாள் ஹோட்டலில் தங்கியதால் 30,000 ரூபாய் பில் எகிறியது. இதனால் வாடகையும் கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து ஹோட்டலில் இருந்து தப்பி செல்ல திட்டம் திட்டினர். அதன்படி காதலன் ஏமாற்றியதால் தீபிகா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தற்கொலை நாடகம் செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட தகவல் அறிந்து பள்ளப்பட்டி போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்மைகள் தெரியவர, டெல்லியில் உள்ள அப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சேலத்துக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சேலம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.