அரசியலுக்கு விஜய்யை வரவேற்க்கும் கமல்!

சென்னை விமானநிலையத்தில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆய்வுக்குழுவிடம் மனு அளிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை. அதற்காக தொழிற்சாலையே தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை. மக்களுக்கு தீங்கும் விளைவிக்கும் தொழிற்சாலை தான் தேவையில்லை. தொழிற்சாலை என்பது மக்களுக்கும் லாபம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். தனி ஒருவரின் லாபத்துக்காக இருக்கக் கூடாது

பெட்ரோல், டீசல் விலை குறைந்து விட்டதாக சொல்லாதீர்கள். பெட்ரோல், டீசலின் விலையை மொத்தமாக ஏற்றி விட்டு கொஞ்சாமாக குறைப்பது என்பது நியாயமில்லை. அதன் விலை ஏறிக் கொண்டு தான் இருக்கிறது என்பதன் பொருள்.  தம்பி விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருந்தால் வரவேற்கிறேன். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை  நடிகர் விஜய் தெரிவித்துள்ளார் அதை அவர் ஊர்ஜிதப்படுத்திவிட்டால் அவர் கண்டிப்பாக வரலாம்.

என்று பேசினார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன்

More News >>