ldquoஎன்னையும், என் மனைவியையும் தனுஷ் ஒருமுறை பார்த்தால் போதும்rdquo - மதுரை தம்பதி உருக்கம்
தனுஷ் என்னையும், என் மனைவி மீனாட்சியையும் வந்து ஒருமுறை பார்த்து செல்ல அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன் என்று மதுரை தம்பதியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்தவர் கதிரேசன், 65. இவர், மேலுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், என் மகன் கலைச்செல்வன், பிளஸ் 1 படிக்கும் போது, காணாமல் போய் விட்டார். தேடிய போது, அவர் சினிமாவில், தனுஷாக நடித்து கொண்டிருந்தார். அவரை சந்திக்க, கஸ்துாரிராஜா உள்ளிட்டோர் விடவில்லை. கலைச்செல்வனிடம் இருந்து ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தார்.
இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தனுஷ் வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு பின், கதிரேசன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலுார் நடுவர் நீதிமன்றமும் வழக்கை ரத்து செய்தது.
அதன் பின்னர் போலி ஆவணங்கள் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நடிகர் தனுஷ் ஏமாற்றிவிட்டதாக மேலூரைச் சேர்ந்த தம்பதியர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கதிரேசன் தம்பதியின் கடிதம் ஒன்றை அளித்தனர்.
அந்த கடிதத்தில், ’’பாசமிகு உறவினர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். தங்களுடைய விருப்பமாம் நமக்கு முக்கியம் நம்முடைய தாய், தந்தைதான் அவர்கள்தான் வாழும் தெய்வங்கள் நம் குடும்பம்தான் முக்கியம் என கூறிய தங்களை மனமார வாழ்த்துகிறேன்.
நம் குடும்ப உறவு மேம்பட நான் பெற்று வளர்த்த என் மகனும் தாங்கள் மருமகனுமாகிய கலைசெல்வன் என்ற தனுஷ் - ஐ தனது பெற்றோராகிய என்னையும், என் மனைவி மீனாட்சியையும் வந்து ஒருமுறை பார்த்து செல்ல அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன். குடும்ப உறவு மேம்பட வாழ்த்துக்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.