பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு டெங்கு காய்ச்சல்
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை உறுதி செய்துள்ளது. அவர், விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஆஷிக் 2 படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஷ்ரத்தா கபூர். தற்போது, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து பயோபிக் படம் உருவாகி வருகிறது. அதில், சாய்னா நேவாலாக ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில், ஷ்ரத்தா கபூர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தற்போது, தனக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளதாக, ஷ்ரத்தா நேற்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தகவல் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஷ்ரத்தா கபூரின் ரசிகர்கள் அவர், விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.