3ஆவது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச்சந்தை!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயை கடந்து வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. பங்குச்சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி சந்தையில் நேற்றைய வர்த்தக முடிவில் 24 பைசா அளவு குறைந்து, 73 ரூபாய் 58 காசுகளாக இருந்தது. இன்று காலை வர்த்தகத்தின்போது 2 காசுகள் அளவுக்கு மதிப்பு உயர்ந்தது. இருப்பினும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74 ரூபாயை கடந்து, வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.

செலாவணிக் கொள்கையில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74 ரூபாய் 13 காசுகள் அளவுக்கு சரிந்தது.வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74 ரூபாயை கடந்து வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்தன.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிந்து 34 ஆயிரத்து 376 புள்ளிகளில் நிலைகொண்டது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 282 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 316 புள்ளிகளில் நிலைகொண்டது.

More News >>