பலமுகம் கொண்ட ராம்லீலா - விஜயதசமி பண்டிகை

விஜயதசமி என்னும் பண்டிகை எல்லா மாவட்டங்களிலும் வெவ்வேறான பெயருடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இதனை  தசரா  என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும் வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.

இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற நாளாக ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.

தென்னிந்தியாவில் மகிசாசுரனை சக்தி வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மைசூரில் மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்தபின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் முந்தைய நாளான நவமியில் சரசுவதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூசை நடத்தி தசமி அன்று ஆயுதபூசை என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.

More News >>