பாலிடெக்னிக் விரிவுரையாளர் விவகாரம்... இடைத்தரகரிடம் விசாரணை

மத்திய குற்றப்பிரிவு போலீசார், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு குறித்து இடைத்தரகரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தேர்வு எழுதிய 196 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் கணேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழும்பூர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. கணேஷ் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 41 அரசு பாலிடெக்னிக்குகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியானது.

இதில் பலருக்கு முறைகேடாக கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

More News >>