காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும் - ரஜினிகாந்த்

காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும். சினிமாவாகட்டும், அரசியலாகட்டும் வளர்ச்சியை காலம்தான் முடிவு செய்யும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்களை சந்தித்து வந்தார். இதனால், தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு ஆறு நாள்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

பிற்கு மேடையில் பேசிய ரஜினிகாந்த், ‘’நடிப்பு, புகழ் இருந்தால் மரியாதை கொடுப்பார்கள். மதிப்பு வேண்டும் என்றால் குணாதிசயங்கள் முக்கியம். நீ எப்படி நடந்துகொள்கிறாய், எப்படி பேசுகிறாய், எப்படி வாழ்கிறாய் என்பதை பொறுத்துதான் மதிப்பு வருகிறது.

அதில்தான் பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இன்னும் எல்லோருடைய மனதிலும் வாழ்கிறார். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் இருப்பார். அதற்கு காரணம் அவருடைய குணாதியசங்கள். அதுதான் முக்கியம்.

ஒரு மனிதன் தனது குணாதிசயங்களை வைத்தே பிறரால் மதிக்கப்படுகிறான். திறமை, உழைப்பு எல்லாம் இரண்டாம் பட்சம்தான். காலம்தான் முதலிடம் அந்த காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும். சினிமாவாகட்டும், அரசியலாகட்டும் வளர்ச்சியை காலம்தான் முடிவு செய்யும்’’ என்று தெரிவித்தார்.

 

More News >>