காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

பருவமழை, வெள்ளம் பாதிப்பு குறித்து கண்காணிக்க காஞ்சிபுர மாவட்டத்திற்கு மட்டும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை வருகின்ற 8ம் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக நள்ளிரவு ஆரம்பித்து அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக காஞ்சியில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பின. மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள முதன்மை செயலாளரரும், உணவு பாதுகாப்பு துறை கமிஷனருமான அமுதா ஐ.ஏ.எஸ் தலைமையில் பாலச்சந்திரன், முனியநாதன், வள்ளலார், சிவசண்முகராஜா, சுப்பையன், ஆனந்த், செந்தில்ராஜ், அருண் தம்புராஜ், ஜான் லூயிஸ், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகிய மேலும்10 ஐஏஎஸ் அதிகாரிகளை மழை வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>