சூர்யா படத்தில் மோடியாக நடிக்கிறாரா மோகன் லால்?
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 37 படத்தில் மோகன்லால் பிரதமர் மோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து, கே.வி. ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தில், ஜில்லா படத்திற்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆர்யா, சாய்ஷா சேகல் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூர்யா 37 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன. சூர்யாவின் கமாண்டோ கெட்டப் படங்கள் வெளியான நிலையில், தற்போது, பேனரில் ஹிந்தி வாசகத்துடன் பிரதமர் மோடியை போன்ற தோற்றத்தில் மோகன் லால் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், அதில் மோகன் லாலுக்கு பாதுகாவலராக சூர்யா இருப்பது போன்றும் தெரிகிறது.
கோ படம் தமிழக அளவில் அரசியல் பேசி வெற்றியை பதித்தது. மேலும், தற்போது நோட்டா, சர்கார் என தொடர்ந்து அரசியல் படங்களின் அணிவகுப்பு இடம்பெற உள்ளதால், இந்திய அளவிலான அரசியல் படத்தை கே.வி. ஆனந்த் தொட்டுள்ளது இந்த புகைப்படத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. அப்போ என்ஜிகே அவ்ளோதானா பாஸ்?