திருச்சியில் 154 இடங்களில் வெள்ள எச்சரிக்கை?
வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாநகராட்சியில் 154 இடங்களில் வெள்ளம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை பெய்யும் பட்சத்ததில் திருச்சியில் சுமார் 154 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டியளித்துள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, “வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 10% மட்டுமே நகர்புறப் பகுதிகள், மற்றவை கிராமப் பகுதிகள். அந்தப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மக்களை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர மழைக்காலத்தில் மக்கள் தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. உதவி எண்கள்: 1077 மற்றும் 04312418995.