குட்டையை குழப்பி மீன்பிடிக்கும் தினகரன் முயற்சி பலிக்காது-அதிமுக
குட்டையை குழப்பி மீன்பிடிக்க முயலும் தினகரனின் கனவு பலிக்காது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 9 கிராமத்தை சேர்ந்த 418 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் பேசிய அவர், தினகரன் பேச்சு அவரது இயலாமையை காட்டுகிறது, மக்களைச் சந்தித்து வாக்குகளை கேட்பதை விட்டுவிட்டு, சந்தித்தவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார்."
"அரசியல் நாகரீகமற்ற தரம் தாழ்ந்த பேச்சாக மக்கள் கருதுகின்றனர். தினகரன் ஜோக்கராக மாறிவிட்டார். ஆளும் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் இது போன்ற தினகரன் உளறி வருகிறார்." என்றார்.
"அதிகார வெறியில் தினகரன் செயல்பட்டு வருகிறார். அனைவர் மீதும் அவர் குற்றம்சாட்டுவார். குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் பழைய முயற்சியையே இவர் புதிதாக செய்ய முனைகிறார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தினகரனுடன் செல்வதை தற்கொலைக்கு சமமாக நினைக்கின்றனர்."
"என்றைக்கோ நடந்த சந்திப்பை இன்று கூறி உத்தமபுத்திரன் என்று காட்டிக் கொள்ளும் வகையில் வேண்டும் என்று தினகரன் பேசி வருகிறார், ஓபிஎஸ் இந்த ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றவே சந்தித்ததாக விளக்கமளித்துள்ளார் , தினகரன் என்னதான் முயற்சி எடுத்தாலும் கட்சியையும் ஆட்சியையும் ஒன்றும் செய்துவிட முடியாது" என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.