டிடிவி தினகரன் ஓ.பன்னீா் செல்வம் சந்திப்பு- பா.ம.க. தலைவா் விமா்சனம்

துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் எடப்பாடி பழனசாமியை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் 2017ம் ஆண்டு தன்னை சந்தித்ததாகவும், அப்பாது தா்மயுத்தம் நடத்தியதற்காக மன்னிப்பு கேட்டதாகவும் அமமுக துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்தாா்.

இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடா்பாக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மாலை விளக்கம் அளித்தாா்.

இந்நிலையில் பா.ம.க. தலைவா் ராமதாஸ் இது குறித்து கருத்து தொிவித்துள்ளாா். அவா் வெளியிட்டள்ள ட்விட்டா் பதிவில்

 

“டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாராமே, ஆட்சியைக் கவிழ்க்க ஆலோசனை நடத்தினாராமே? "ஒருவர் ஆசைகளை வெறுத்த புத்தர், இன்னொருவர் பொய்யே பேசாத அரிச்சந்திரன். இவர்கள் எது குறித்து பேசியிருப்பர்? மக்கள் நலனுக்காக பேசியிருப்பர் என்று நம்பினால் அவர்களை விட மடையர் இருக்க முடியாது”

என்று அவா்களது சந்திப்பு குறித்து காமெடியாக கருத்து தொிவித்துள்ளாா்.

More News >>