இன்றைய ( 07.10. 2018) ராசி பலன்கள்
இன்றைய ராசிப்பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.
மேஷம்: மேஷ ராசி நேயர்களே, உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களிடம் சிறிய மனஸ்தாபம் வரக்கூடும். புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும். எப்போதும் இல்லாத மன சந்தோஷம் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கவும்.
மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். மனதிற்கு இதமான செய்தி வரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும்.
கடகம்: கடக ராசி அன்பர்களே, பயணங்கள் நல்ல அனுபவத்தை தரும். குடும்பத்தில் சுப செலவு உண்டு. சொத்து வகையில் எதிர்பார்த்த பணம் வரும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசி அன்பர்களே, உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் அதிக கவனம் தேவை.
கன்னி: கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் பண வரவு உண்டு. பேச்சில் மென்மையும், மேன்மையும் அதிகரிக்கும். பெண்கள் வகையில் ஒரு சில பிரச்சனைகள் வரலாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசி அன்பர்களே, குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும்.
விருச்சிகம்: விருச்சிக ராசி அன்பர்களே, பெற்றோர்கள் வகையில் சில செலவுகள் வரும். பண வரவு இருந்த தடைகள் நீங்கும். வாழ்க்கைதுணையின் செயல்கள் மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட முடியும்.
தனுசு: தனுசு ராசி அன்பர்களே, குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பண சேமிப்பு கணிசமான முறையில் உயரும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்: மகர ராசி அன்பர்களே, வரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். குடும்பத்தினர் விரும்பி கேட்ட பொருட்களை வாங்கி தருவீர்கள். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலை பளு ஏற்படும்.
கும்பம்: கும்ப ராசி அன்பர்களே, குடும்ப சுமை கூடும். மனதில் பட்டதை துணிச்சலாக பேசுவீர்கள். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
மீனம்: மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் நல்ல ஒற்றுமை உண்டு. நண்பர்கள் வகையில் உதவி கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும்.