விஷால் மீதான வருத்தத்தை மறைமுகமாக சொன்ன விஜய்சேதுபதி!
விஷால் மீது வருத்தமில்லை. ஆனால், சினிமாவில் பல பிரச்சனைகள் இருக்கிறது என 96 சக்சஸ் விழாவில் விஜய்சேதுபதி பேசினார்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
விஜய்சேதுபதியின் 96 படம் முதல் காட்சி வெளியாக முடியாமல் கேடிஎம் பிரச்சனையால், நின்றது. உடனடியாக தயாரிப்பாளர் நந்தகோபால், விஷாலுக்கு தரவேண்டிய 1.50 கோடி ரூபாய் பணத்தை தராததால், படம் ரிலீஸ் ஆகவில்லை என்ற செய்தி பரவியது. உடனடியாக விஜய்சேதுபதி, தான் அந்த பணத்தை தருவதாக கூறிய நிலையில், அடுத்தடுத்த காட்சிகள் ரிலீசாகின.
இந்நிலையில், படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில், பேசிய விஜய்சேதுபதி, 96 படம் ரிலீஸ் பிரச்சனையில், விஷால் எவ்வளவு பணத்தை விட்டு கொடுத்தார் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன், விமலுக்கு நடந்தது தான் எனக்கும் நடந்து இருக்கிறது. விஷால் மீது தனக்கு வருத்தமில்லை என விஜய்சேதுபதி கூறினார்.
மேலும், சினிமா துறையில் உள்ள பிரச்சனைகளில் 5சதவீதம் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறது. சினிமா துறையில் சிஸ்டத்தில் குறைபாடு உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடையாது என தனது வலியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் விஜய்சேதுபதி.
விஜய்சேதுபதியின் அதிரடி வளர்ச்சியை பிடிக்காமல் விஷால், விளையாடும் சதுரங்க ஆட்டம் இது என கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.