கும்பகோணம் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து- பதற்றம்
கும்பகோணம் துணை மின் நிலையத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கும்பகோணம் சாக்கோட்டையில் நகர மற்றும் ஒன்றிய பகுதி மக்களின் வசதிக்காக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என 8 லட்சம் மக்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
திடீரென இந்த துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து கரும்புகை வெளியேறியது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் மின் இணைப்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது.