சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ரூ.85.04க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு, கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து வந்ததால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மத்திய அரசு கலால் வரியை குறைத்து ரூ.2.50 குறைத்தது.
இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.84.89ம், டீசல் விலை ரூ.77.42ம் விற்பனையானது.
இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்த்தி, ரூ.85.04க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்த்தி ரூ.77.73க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனர்.