சாலை விபத்தில் உயிரிழதோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: பிரதமர்
ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்து ம்ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில், உத்தர காசி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 9 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றம் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட இந்த இரண்டு சாலை விபத்துகளிலும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.